அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''பணக்காரர்களை விட ஐநூறு வருடங்களுக்கு முன் ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 487)
இப்னு அப்பாஸ் (ரலி), இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''சொர்க்கத்தில் உற்றுப் பார்த்தேன். அங்கு வசிப்பவர்களில் அதிகமானவர்களாக ஏழைகள் இருப்பதைக் கண்டேன். மேலும் நரகத்திற்குச் (சென்று) உற்றுப்பார்த்தேன். அங்கு வசிப்பவர்களில் மிக அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 488)
உஸாமா இப்னு ஸைத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''சொர்க்கத்தின் வாசலிலே நான் நின்றிருந்தேன். அதனுள் நுழைபவர்களில் பெரும்பாலோர் ஏழைகளாக இருந்தார்கள். வசதியானவர்கள் (வாசலிலேயே) தடுக்கப்பட்டிருந்தனர். எனினும் நரகவாசிகள், நரகத்திற்கு கொண்டு செல்லப்பட கட்டளையிடப்பட்டனர்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 489)
அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அவர்களின் குடும்பத்தினர் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் தொலிக் கோதுமையின் ரொட்டியைக் கூட வயிறு நிரம்ப சாப்பிட்டதில்லை '' (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 491)
அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நபி(ஸல்) அவர்கள், மரணிக்கும் வரை உயர்ந்த தட்டுகளில் சாப்பிட்டதே இல்லை. மேலும் அவர்கள் இறக்கும் வரை, மிருதுவான ரொட்டியைக் கூட சாப்பிட்டதில்லை.'' (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 494)
Monday, February 15, 2010
Subscribe to:
Posts (Atom)
.jpg)